February 17, 2019
Sterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?- நாளை தீர்ப்பு
6 years ago

Thoothukudi Sterlite Verdict : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட பின் அதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தீவிர ஆய்வுகளுக்கு பிறகு ஆலையை திறக்கலாம் என்றும் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் சார்பிலும் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்பு வழங்க பட உள்ளது.