January 29, 2019
சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரி சோதனை
6 years ago

தமிழகத்தில் 74 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து சென்னையில் 72 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஜி ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி வணிக நிறுவனங்கள் (ஜவுளிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்), யோகரத்தினம் பொன் துரைக்கு சொந்தமான சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவை உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.