January 29, 2019
குடிமகன்கள் கவனத்திற்கு…தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட ஹைகோர்ட் கிளை உத்தரவு
6 years ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், காந்தியடிகள் நினைவுதினமான நாளை தமிழகம் முழுவதும் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.