February 4, 2019
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
6 years ago

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி தொடரும். ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.