February 2, 2019
அங்கீகாரம் இல்லா பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: கல்வி துறை எச்சரிக்கை
6 years ago

அங்கீகாரமின்றி இயங்கும் பள்ளிகள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அங்கீகாரம் பெறும் நடவடிக்கையை பள்ளிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அங்கீகாரமின்றி இயங்கும் பள்ளிகளிடம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும், தவறினால் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும் எனவும் பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.