அரசியல் திருப்பத்தை எற்படுத்துமா திருப்பூர் வருகை ?
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு திருப்பூர் பிரச்சாரம் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகிறார். அதோடு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் மோடி..
மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரதமர் கோவை வந்தடைகிறார்.. பின் 3.05 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்கிறார்.
அரசு விழாவில் டிஎம்ஸ்-வண்ணாரபேட்டை வழிதடத்தில் மெட்ரோ சேவை, விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சபாநாயகர் தனபால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
அதன் பின்னர் 3.25 மணிக்கு பாஜக பொது கூட்டம் நடைபெறும் பெருமாநல்லூர் வருகிறார். அங்கு மாபெரும் பொதுகூட்ட மேடை அமைக்கபட்டுள்ளது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ளனா். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். பின் 5.10 மணிக்கு புறப்பட்டு பிரதமர் மோடி கோவை வழியாக கர்நாடகா செல்வார் என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் தமிழக பாஜக தலைவர் கூறுவகையில் மோடி தமிழகம் வருவதால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மோடி சுற்றுபயணம் மெற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் தமிழகம் வருவதையொட்டி டிவிட்டரில் ‘’GO BACK MODI” மீண்டும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடதக்கது.