Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா
Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்
அதிமுக 24 தொகுதிகளும்
பாஜக 8 தொகுதிகளும்
பாமக 4 தொகுதிகளும்
தேமுதிக 4 தொகுதிகளும்
போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.