மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.
Vaiko
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்
திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி
மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் வருகின்ற மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்தபோவதில்லை, வைகோ தகவல்
Vaiko black flag protest: நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாளை சென்னை வருகிறார், அதில் அதிமுக, பாமக போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்ட மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்க்க மோடி வந்ததால் தான் மதிமுக கருப்பு கொடி காட்டியதாகவும் நாளை அவர் பிரச்சாரம் செய்யதான் வருகிறார் என்பதால் நாங்கள் கருப்பு கொடி காட்ட போவதில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்
DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி
DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு
DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
வைகோ கருப்புக்கொடி போராட்டம்
Vaiko black flag protest: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமாரி வருகிறார் அவர் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவில் பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் எந்த இடத்திற்கு பிரதமர் வந்தாலும் அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டுவோம் என உறுதியாக கூறியுள்ளார் பிரதமர் வரும் போது யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம்
Vaiko black flag protest: தேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். சமீபத்தில் பொன்ராதாகிருஷ்ணன் யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறாம் தேதி வண்டலூர் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து
MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை
Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு
Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.
மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது
Lok Sabha Elections 2019: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். அதில் மதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.
இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ
கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு
பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ ” தேர்தல் பிரசாரம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் அரசு விழாவில் மோடி பங்குகொள்ளவது ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த ஒரு பிரதமரை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் கருப்பு கொடி காட்ட வைகோ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.