India: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, “ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட மூன்று நதிகள் வழி பாகிஸ்தானிற்கு இந்தியா வழங்கி வரும் சிந்து நதி நீர் நிறுத்தப்படும் என்றும் அந்த தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து இந்தியாவின் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க படும்” என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Uttar Pradesh
லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி
லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி!
2015 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்த பின் அவருடைய அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். எதிர் கட்சிகளின் ஒவ்வொரு செய்கையையும் விமர்சித்து சிறிது கிண்டலாக அவர் போடும் டிவீட்களும், சரமாரியாக கேட்கும் கேள்விகளும் ஊடகங்களின் பார்வையை அவர்மீது திருப்பியது. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனக்கென ஒரு ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கினர். 15 நிமிடங்களில் 5000 பேர் அவரை பின்தொடர்ந்தனர். ட்விட்டர் என்ட்ரி அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லேட்டாக வந்த மனைவியை செல்போனிலேயே ‘தலாக்’ என மூன்று முறை கூறி விவாகரத்து செய்த கணவர்
உத்தரபிரதேசத்தில் வசிக்கும் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண், தனது பாட்டியை பார்க்க செல்ல வேண்டும் என்று தன் கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவளது கணவர், பாட்டியை பார்க்க அரை மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து பாட்டியை பார்க்க சென்ற மனைவி, 40 நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு திரும்புயுள்ளார், தான் சொன்ன அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வரமால் லேட்டாக வந்ததால் கோபம் அடைந்த கணவர், தனது செல்போனிலேயே தனது மனைவியை ‘தலாக்’ என, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்துள்ளார்.
வெறும் 945 ரூபாயில் “கும்பாஹ் ஆப்பர்” ஐஆர்சிடிசி அறிவிப்பு
உத்திரபிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் வரும் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிற கும்பமேளாவை முன்னிட்டு, அங்கு பயணம் செய்யும் யாத்திரீகர்களுக்கு உதவும் வகையில் புதிய பேக்கேஜ் ஒன்றை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கும்பாஹ் என்ற பெயர் கொண்ட இந்த பேக்கேஜ்ஜின் படி, வெறும் 945 கட்டணத்தில் கும்பமேளாவுக்கு செல்வதுடன், உத்திரபிரதேசத்தில் உள்ள பல்வேறு புனித தளங்களுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி
காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.