thirunavukkarasar

திருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் திருச்சி தொகுதியையும் எங்களுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, மிக விரைவில் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு யாருக்கு எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் – விஜயகாந்த் இன்று சந்திப்பு

DMDK Vijayakanth: சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியா திரும்பி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அவரின் உடல்நலன் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவருடைய இல்லத்திற்கு செல்கிறார். தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில், திமுகவும் தனது பங்கிற்கு முயற்சிகளை முன்வைக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்துகிறது.

பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை

மக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.

ரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு

வருகின்ற மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அண்மையில் திருமாவளவன் ரஜினிகாந்த் ஆகியோர் திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த ரஜினி தனது படங்களில் பிசியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவோடு இணக்கமான சூழலில் இருக்கும் தருணத்தில் ரஜினி அவர்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமிர்த்தமான சந்ததிப்பு எனவே கூறப்படுகிறது.