வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.
Thambidurai
கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி
Lok Sabha Election 2019 Latest News: அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி
Lok Sabha Election 2019 Latest News & Updates: அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.
Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி
Jayalalitha Death News in Tamil: ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் – தம்பி துரை அதிரடி
Jayalalitha Death News in Tamil: கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பி துரை, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இறந்து விட்டார். எனவே அதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார்.
Lok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து
Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?
2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.
மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்
தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.
ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:
பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:
துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.
தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,
அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு பதில்களை நோக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.