Tamil Nadu Budget 2019: மத்திய அரசு 2018-2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில் பல அம்சங்களை கொண்டிருந்த பா ஜ க அரசின் அந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்று சிலரும்; நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி அரசு கையாண்டுள்ள தந்திரம் இது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அ தி மு க – பா ஜ க கூட்டணி குறித்த சாதகமான சூழலே நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆதலால் இதன் மீதான தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்
கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த, “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக மாற்றியது, மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூபாய் 1001 கோடி ஒதுக்கியது, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 755-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டது, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 875-ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது, வேளான் துறைக்கு 1680 கோடி ஒதுக்கியது, விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூபாய் 7000 கோடி ஒதுக்கியது” முதலிய அம்சங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.
இதையடுத்து இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் விவசாய கடன் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். அதேபோல இளைஞர்களின் வேலையின்மையும் நாட்டின் விவாத பொருளாக இருந்து வருவதால் அது சார்ந்து ஏதேனும் அம்சம் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்
சமீபத்திய நாட்களில் கல்வி மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் மீதான மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்த நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி மேம்பாடு சார்ந்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
முந்தைய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 10,158 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அதில் கணிசமான ஏற்றம் இருக்கலாம். அது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்து விற்பனை கடைகள் ஆகியன புதிதாக ஏற்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம்.
Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்
மொத்தத்தில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அ தி மு க சந்திக்க போகும் முதல் மக்களவை தேர்தல் மிக அருகில் உள்ளது. அதில் பெறப்போகும் வெற்றி இடங்களின் எண்ணிக்கை கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சமர்பிக்கப்படப்போகும் இந்த பட்ஜெட் அ தி மு க அரசின் வெற்றி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஆளும் அரசும் உணர்ந்திருக்கும். இதை கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டின் அம்சங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்றே தோன்றுகிறது. துறைகளுக்கான நிதியும் மக்களுக்கான திட்டங்களும் போன முறையை விட இம்முறை கணிசமாக கூடியே இருக்கும். நிறைவடையா விடினும் குறை சொல்வதற்கு இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.
Tamil Nadu Budget 2019: Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்