தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக கூறினார். மேலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய அவர், இந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.
Tamil Nadu Breaking news
அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை
திருச்சியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து தூக்கில் தொங்கியதுடன் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டார். நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டனாக பணிபுரியும் தமிழ்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு அவரது காதல் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பங்களும் குறித்துட் திருச்சி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.
காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.
8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்
தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.
மெரினாவில் குளிப்பதற்கு வயது வரம்பு 18
மெரினா கடற்கரையில் குளிப்பதற்கு வயது வரம்பு 18 என நிர்ணையிக்க பட்டுள்ளதாக சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மெரினாவை நோக்கி மக்கள் தஞ்சம் அடைகிறார்கள், அப்போது அசம்பாவிதகங்களை தவிர்க்கும் வகையில் இதனை நடைமுறை படுத்தவுள்ளனர். அதனையும் மீறி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளித்தால் அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.