Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.
Tamil Nadu BJP
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு
BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.
முதல்வர் பழனிச்சாமி, தமிழிசை சந்திப்பு
Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர், அதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திதுள்ளார், இந்த சந்திப்பில் பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கபட்டலாம் என தகவல்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு
பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை
மக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.