பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.
Tamil Nadu AIADMK News
டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை
வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது
கடந்த மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை தனித்து நின்று வென்றது அதிமுக, அதற்கு அவர்களது தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம். கச்சத்தீவில் இருந்து மீனவர் நலன், மாணவர் நலன் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. அதுபோல வரும் மக்களவை தேர்தலிலும் சிறப்பான வெற்றியை நோக்கி அந்த கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதற்காக குழு ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் மூத்த கட்சி நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம், மனோஜ் பாண்டியன், மற்றும் முன்னால் எம்.பி ரவி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.