ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு உள்ளனர். நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வரும் பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Strike
தமிழகத்தில் 4-வது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. கடந்த 22ம் தேதி தொடங்கிய இவர்களது போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் அந்த பணியிடத்தில் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கேபிள் டிவி ஒளிபரப்பு கட்: தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் அறிவிப்பு
மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 16 மணிநேரம் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படுமென தமிழ்நாடு டிஜிட்டல் ஆபரேட்டர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் பேசிய சங்க நிர்வாகிகள், கட்டண முறையை திரும்பப் பெற வேண்டும், 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியினை ரத்து செய்ய வேண்டும், கார்ப்பரேட் சேனல்களுக்கு வாரி வழங்கும் சலுகைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.