STR

தனது படத்தை ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்த நடிகர் சிம்பு

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர்.

என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்: நடிகர் சிம்பு

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் வேதனையில், பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அண்டா நிறைய பால் ஊற்றி பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள் என்றே கூறினேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளியானது “வந்த ராஜாவா தான் வருவேன்” படத்தின் 2-வது சிங்கிள்

நடிகர் சிம்பு நடிப்பில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியே வர உள்ள வந்த ராஜாவா தான் வருவேன் படத்தின் 2-வது சிங்கிள் “வாங்க மச்சான் வாங்க” வெளியானது. இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “அத்தரிண்டிக்கி தாரிடி” படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். சுந்தர் சி இயக்கத்தில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

எனக்கா ரெட்கார்டு? சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலிருந்து முதல் சிங்கிள் டிராக் ‘ரெட்கார்டு’ வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பவன் கல்யாண், சமந்தா நடித்த ‘அத்தாரிண்டிக்கி தாரெட்டி’ என்ற தெலுங்கு ஆக்ஷன் காமெடி படத்தின் ரீமேக் தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.