Sports

நாளைய போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பர் ஒன் டென்னிஸ் வீரரிடமே அடையாள அட்டை கேட்ட பாதுகாவலருக்கு குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரின் போது தனது அடையாள அட்டையை காண்பிக்காத்தால் ரோஜர் ஃபெடரர் பாதுகாவலர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது குறித்த வீடியோவை, ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதில், “ரோஜர் ஃபெடரெருக்கும் அடையாள அட்டை தேவை” என்று குறிப்பிட்டுள்ளது. யாராக இருந்தாலும், அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்புடன் கடைபிடித்த காவலருக்கும், அதற்கு மதிப்பளித்த பெடரெருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகின் 2வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டாரக சென்னை சிறுவன் தேர்வு

சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ் நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும், குகேஷ் உலகிலேயே 2வது இளம் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவிலேயே இளம் கிராண்ட் மாஸ்டர் போன்ற பெருமைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.