Lok Sabha Elections 2019: மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக , காங்கிரஸ் சிபிஎம்,சிபிஐ,பாஜக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Short news in Tamilnadu
புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு
Puducherry: திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது
Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி
Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.
Puducherry News in Tamil: தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலனுக்காக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசினார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தங்களது கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.
Puducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி
Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி பேசியதாவது புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடுவது சரி அல்ல என்றார். புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கிரண்பேடியை மோடி தூண்டிவிடுகிறார் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.