Banner | Mindscreen Cinemas |
Cast | GV Prakash Kumar, Aparna Balamurali, Dhivyadharshini, Kumaravel, Nedumudi Venu, Vineet |
Direction | Rajiv Menon |
Production | Mindscreen Cinemas |
Music | AR Rahman |
கீழ் ஜாதியில் பிறந்தவர் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) இவர் விஜய் பேன் விஜய் படங்கள் ரிலிஸ் என்றால் தியேட்டர் போய் அங்கு பால் ஊற்றி ட்ரம்ஸ் அடித்து கலாட்டா செய்வார். இவரது அப்பா குமரவேல் மிருதங்கம் செய்பவர், அம்மா சூப் கடைவைத்து வியாபாரம் செய்து வருகிறார். ஜிவி பிராகாஷ் ரசிகர் மன்ற தகறாரில் மண்டை உடைந்து அதற்கு கட்டு போடும் பெண்ணுடன் காதல் இப்படி பொறுப்பில்லாமல் சுற்றி வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு, அவரது சீடர் வினீத் இருவரும் கச்சேரிக்கு போகும் போது வினீத் மிருதங்கத்தை கிழே போட்டு உடைத்து விடுகிறார்.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
கச்சேரிக்கு போகும் நேரத்தில் இப்படி செய்துவிட்டாயே என்று குமரவேலுக்கு போன் செய்து உடனே ஒரு மிருதங்கம் வேண்டும் என்று சொல்ல ஆள் இல்லை என்பதால், குமரவேல் பீட்டரிடம் மிருதங்கத்தை கொடுத்து அனுப்புகிறார். பீட்டர் அதை சரியான நேரத்தில் அதாவது கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்துக்கு சரியாக கொண்டு கொடுக்கிறார். நெடுமுடி வேணு கச்சேரியில் மிருதங்கம் வாசிக்க அதை பார்த்து ரசித்த பீட்டருக்கு மிருதங்கம் மேல் ஒரு காதல் உண்டாகிறது. நாமும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
ஆனால் இவர் கீழ் சாதி என்பதால் இவரின் ஆசையை அப்பாவிடம் சொல்ல, அவரும் இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் இவருக்கு இந்த மிருதங்கம் மீதான காதல் இதில் நாம் சாதிக்க வேண்டும் வேம்பு ஐயரிடம் அதாவது நெடுமுடி வேனுவிடம் சீடராக சேர்ந்து இதை முறையாக பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் இவர் கீழ் சாதி இதனால் இவரை வினீத் மிகவும் அவமான படுத்துகிறார்.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
இந்நிலையில், இவரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட நெடுமுடி வேணு இவரை சீடராக சேர்க்கிறார். இது மேலும் வினித்துக்கு கோபம் உண்டாகி மேலும் மேலும் பீட்டரை அவமானம் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த நெடுமுடி வேணு வினீத்தை வீட்டை விட்டே அனுப்புகிறார். ஒரு கிழ் சாதி பையனுக்காக என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் என்ற கோவத்தில் நெடுமுடி வேனுவையும், பீட்டரையும் தன் தங்கை டி டி மூலம் பழிவாங்க நினைக்கிறார். இந்த பழி வாங்கல் படலத்தின் தொடர்ச்சியாக பீட்டர் மீது ஒரு பொய் கேஸ் போட்டு அந்த ஊரை விட்டே போகின்ற நிலைமை ஏற்படுகிறது. இதை மீறி பீட்டர் மிருதங்க வித்வான் ஆகிறாரா இல்லையா என்பது தான் மீதி கதை.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
இயக்குனர் ராஜீவ் மேனன் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை மிகவும் அழகாக கதை களமும் சரி காட்சிகளும் அமைத்துள்ளார். வினீத் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் தடம் பதித்து உள்ளதோடு, வில்லன் கேரக்டரில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
நாயகியாக அபர்ணா பாலமுரளி பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக வரும் குமரவேல் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். பல படங்களில் தன் திறமையை நிருபித்த குமரவேல் இந்த படத்திலும் அதை சரிவர செய்து இருக்கிறார்.
Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
தொடக்கத்தில் இருந்த திரைக்கதையின் உச்சம் நேரம் ஆக ஆக தொய்வாவது சருக்கல். ஆனாலும் சர்வ தாளத்தையும் நம் முன் காட்டியதில் இயக்குநர் வெற்றி வாகை சூடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் சர்வம் தாளமயம் ரசிக்க வேண்டிய படமாக இருக்கும்.
Movie Review: Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்
சர்வம் தாளமயம் சினிமா ரேட்டிங் – 4/5