Sarath Kumar

சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் சரத்குமார் தகவல்

மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அண்மையில் தனது முடிவை அறிவித்திருந்தார் சரத்குமார். மேலும் நேற்று அவர் பேசுகையில் தேமுதிகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர் பேசிய சரத்குமார் நாங்கள் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் எங்களது கட்சியின் வாக்கு வங்கியை நாங்கள் தெரிந்து கொள்வதற்காக தனித்து போட்டியிடுகிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயார் சரத்குமார் பேச்சு

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்கத் தயாராக உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக அதிமுகவுடனும், திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சரத்குமார் இந்தமுடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைகளில் இரு கட்சியினரும் ஈடுபடுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம்

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.