Chennai Rains: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து இருக்கலாமோ என கணிக்கப்படுகிறது.
regional meteorological centre
Tamil Nadu Weather: லேசான மழைக்கு வாய்ப்பு
Tamil Nadu Rain: வங்காள விரிகுடாவில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி தொடரும். ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனால் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு நிலைமை மாறும் என தெரிகிறது. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுவகையில் ”லட்சதீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர் “ மேலும் நீலகிரி மாவட்ட மலை பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
லட்சத்தீவுகள் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதன் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்தே காணப்படுவதாகக் கூறிய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த நிலை தொடரும் என குறிப்பிட்டுளள்து. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2வது வாரம் வரை பனி தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும். காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.