மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கன்னியாகுமாரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Rahul Gandhi speech in Kanyakumari
”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்
மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 9 கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
பிரதமரை கடுமையாக சாடிய ராகுல்
பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மாநில கட்சிகளை மத்திய பாஜக அரசு அடக்குமுறை செய்ய முயற்ச்சிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தை டெல்லியில் இருந்து பாஜக ஆண்டுவருவதாகவம் கூறினார். மேலும் 2014 நாட்டு மக்களிடம் மோடி என்ன வாக்குறுதிகளை தந்தாரோ எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.
15 லட்சம் ஏங்கே?
2014 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மோடி அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துகிறேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றார் ராகுல்.
மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எச்.ஏ.எல் என்ற நிறுவனத்தின் மூலமாக 526 கோடி ரூபாய்க்கு போர் விமானம் வாங்க அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தற்போது ஒரு போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்த மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது என்றார்.
45 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம்
மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு. தற்போதைய ஆட்சியில் ஏழைமக்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றார். மேலும் கடந்த 45 வருடகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு செய்து தரப்படும் எனக் கூறினாரே தவிர அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது தான் உண்மை.
போட்டி போட்டு புகழ்ந்த ராகுல் மற்றும் ஸ்டாலின்
பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நமது நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் அவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவியேற்று கொள்வார் என கூறினார். பின்னர் தனது உரையை துவங்கிய ராகுல் காந்தி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இரு தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதை மக்கள் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.
மோடியா ? ராகுலா ?
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தான் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.
மே23 வரை காத்திருப்போம்….
பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு
மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.
மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்
சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.
ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை
கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.