புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ள நாராயணசாமி அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்ணா போராட்டம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வரை சந்தித்து பேச தயாராக உள்ளேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Puducherry
Puducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டித்துதான் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என புதுவை முதல்வர் கூறியுள்ளார் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்
Puducherry Breaking News: கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தர்ணா
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர், இது வரை மாநில அரசு சமர்பித்த 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்காத்தை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறை படுத்த ஆளுநர் தடையாய் உள்ளார் என கூறி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துணை ராணுவம் வரவழைக்க பட உள்ளதாக தகவல்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாரம்பரிய கார் கண்காட்சி
புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப் இணைந்து நடத்திய 9-வது பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆஸ்டின், மோரிஸ், மோரிஸ் மைனர், ஜாகுவார் உள்பட 74 கார்கள் பங்கேற்றன. கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற இந்த கார்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும் பாரம்பரிய கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.