இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்
ரேட்டிங் 3/5
மேட்ரிமோனியல் இணையதளம் நடத்தி வரும் திரு(பிரபுதேவா), 99 திருமணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். ஆனால், அவர் நடத்தும் 100-வது திருமணம் பல்வேறு சவால்களை சந்திக்கிறது. இந்த படத்தில் நடிகை சமூக ஆர்வலர் சாரா கேரக்டரில் நடிகை நிக்கி கல்ராணி, சைக்காலஜி மாணவியாக அதாஹ் சர்மா ஆகியோர் நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியின் தந்தையாக நடிகர் பிரபு நடித்துள்ளார். இந்த படம் டெக்னாலஜி மக்கள் வாழ்வில் எப்படி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை 127 நிமிடம் காமடியாக விளக்குகிறது.
பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சார்லி சாப்லின். ஷக்தி சிதம்பரம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. 17 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான்” பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பிளஸ்
- சிறந்த டைரக்சன்
- சிறந்த தயாரிப்பு பணிகள்
- நடிகர்களின் சிறப்பான நடிப்பு
படத்தின் மைன்ஸ்
- மோசமான எடிட்டிங் பணிகள்
- மோசமான சினிமோட்டோகிராபி
- மோசமான ஸ்கிரீன்பிளே
மொத்தத்தில் இந்த படம் ஒரு நல்ல படமாக இருக்கும். இதில் ஸ்கிரீன்பிளே இன்னும் நன்றாக இருந்திருந்தால், படம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தபோதும், எல்லோருக்கும் பிடித்தமான படமாக இது இருக்கும்.