2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.
PMK-BJP Alliance
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?
2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.
அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition
ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition
மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.
ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition
பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?
அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.