O.Pannerselvam

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. தேனி
  13. மதுரை
  14. நீலகிரி (தனி)
  15. திருநெல்வேலி
  16. நாகப்பட்டனம் (தனி)
  17. மயிலாடுதுரை
  18. திருவள்ளூர் (தனி)
  19. காஞ்சிபுரம் (தனி)
  20. தென் சென்னை

பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.

தேமுதிகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை, ஓபிஸ் தகவல்

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாக இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் பாமக வுக்கு வழங்கியுள்ளது போல் 7 தொகுதிகளுக்கு மேல் வழங்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓபிஸ் தகவல்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

AIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி, அதிமுக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பினார். அப்போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என கூறினார். மேலும் 1967 முதல் காங்கிரஸ் அதிமுக,திமுக மீது தான் சவாரி செய்து வருகிறது என விமர்சித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள் ”இது போன்ற கருத்துகள் எழுவது பெரிதல்ல, எந்த கட்சியும் தனித்து நிற்கும் சூழல் இன்று இல்லை”.

Tamil Nadu Budget 2019: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்

2019 – 20ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார. தமிழக துணைமுதல்வரும், நிதியமைச்சருமான பன்னீா் செல்வம் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன?”- நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது

கடந்த மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை தனித்து நின்று வென்றது அதிமுக, அதற்கு அவர்களது தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம். கச்சத்தீவில் இருந்து மீனவர் நலன், மாணவர் நலன் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. அதுபோல வரும் மக்களவை தேர்தலிலும் சிறப்பான வெற்றியை நோக்கி அந்த கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதற்காக குழு ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் மூத்த கட்சி நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம், மனோஜ் பாண்டியன், மற்றும் முன்னால் எம்.பி ரவி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி வாய்ப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் மாநிலத்தின் 24 தொகுதிகளில் தான் போட்டியிட்டு இதர தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை களம் இருக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.