AMMK: நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
O. Panneerselvam
இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு
Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.
Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி
Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்
Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்
தொழில் துறை:
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
- முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
- குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
- தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
- கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
- நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
- கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
- ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.
மின்சார துறை:
- கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
- ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
- தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
- மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
- ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
- ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
- ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.
Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்
தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை
Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்
- மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
- பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
- புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
- தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை
தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!
Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.
- விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
- கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
- விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
- உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
- வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
- கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!
தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை
Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.
- நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. - இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
- மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
- 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
- ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.
Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை
யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்
தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு
மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.