வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
MLA Murugesan
துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து
வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.
தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்
Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.