மெரினா கடற்கரையில் குளிப்பதற்கு வயது வரம்பு 18 என நிர்ணையிக்க பட்டுள்ளதாக சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மெரினாவை நோக்கி மக்கள் தஞ்சம் அடைகிறார்கள், அப்போது அசம்பாவிதகங்களை தவிர்க்கும் வகையில் இதனை நடைமுறை படுத்தவுள்ளனர். அதனையும் மீறி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளித்தால் அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.
Marina Beach
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் அமைக்க தடை கோரி, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தள்ளுபடி செய்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிபதிகள், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காக பணியில் 15 ஆயிரம் போலீஸார்
காணும்பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீசார் தரப்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் இதர இடங்களில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.