சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Mamata Banerjee Dharna
நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி
மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.
எங்கள் கட்சியை எதிர்க்கவே மம்தா மகாகத்பந்தன் அமைப்பை உருவாக்கியுள்ளார்: ராஜ்நாத்சிங்
மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை மம்தா பானர்ஜி குறைத்து கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள மகாகத்பந்தன் அமைப்பு பாஜகவை எதிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உலக முதலீட்டாளர்களை அழைப்பதற்காக உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது என்றார்.
கொல்கத்தா போலீசை விசாரிக்க வந்த சிபிஐ – மம்தா கண்டனம்
கொல்கத்தாவில் பண மோசடி செய்தவர்களுக்கும் காவல் ஆணையர் ராஜீவிற்கும் தொடர்புள்ளாதாக கூறி சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளனர், ஆனால் அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது, இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா, இது பாஜக அரசு செய்யும் சதி எனவும், கொல்கத்தாவில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.