மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Makkal Needhi Maiam
ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு
வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் “இணைந்த கைகள்” சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு வேறு எந்த கட்சிக்கும் உடலுறுப்புகளை சின்னமாக வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மேலும் அதைத் தொடர்ந்து விசில், பேனா, டார்ச் லைட் ஆகியவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கும்படி மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என் காலத்திற்கு பிறகு என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, மகளோ என் மைத்துனரோ கட்சியை எடுத்து நடத்த மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மக்கள் அறவே நிறுத்திவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 5000 , 10000 வாங்குவது நீங்கள் நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு வாக்களித்தால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை நீங்கள் சம்பாதிப்பதற்கான வழிகள் வகுக்கப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கமல்ஹாசன், பாரிவேந்தர் கூட்டணி அமைக்க வாய்ப்பு
Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமையலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் எஸ் ஆர் எம் குழும நிறுவனத் தலைவரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர் அவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.
நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்
Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.
கமலை விட நாங்கள் மூத்தவர்கள் – சீமான்
Lok Sabha Elections 2019: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூட்டணி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். “கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம். அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி வரும் நாங்கள்தான் மூத்தவர்கள். ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகின்றனர். எனவே அவர்தான் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் ” மேலும் தமிழக மக்கள் பாஜக கூட்டணியை 200% நிராகரிப்பார்கள் நிராகரிக்கவைப்போம். அதற்காகவாவது நாங்கள் தேர்தல் களத்தில் போராடுவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்றார்.
Makkal Needhi Maiam: எங்களை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் – சீறும் கமல்
Makkal Needhi Maiam Latest News: மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கமல் 25 வருடமாக இவர்களுக்கு கிராம சபை கூட்டம் இருப்பது தெரியாமல் போனது ஏன். எங்கள் கட்சி நடத்தியதை பார்த்து காப்பி அடித்துள்ளனர், என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரை கமல் விமர்சித்துள்ளார்.
Makkal Needhi Maiam: நான் சட்டையை கிழிக்க மாட்டேன் கமல் கிண்டல் பேச்சு
Makkal Needhi Maiam Latest News: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் சட்டமன்றத்தில் எனது சட்டயை கிழிக்க மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படியே கிழிந்தாலும் சட்டையை மாற்றிவிட்டு தான் வெளியே வருவேன் என்றார் கமல். இரண்டு ஆண்டுகள் முன்னர் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து விட்டதாக கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.