டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Madras High Court
ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை: வருமான வரித்துறை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட பட்டியலில் உள்ளது என்றும், முடக்கத்தில் இருந்தாலும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் அமைக்க தடை கோரி, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தள்ளுபடி செய்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிபதிகள், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.