Banner | Lyca Productions |
Cast | Catherine Tresa, Megha Akash, Ramya Krishnan, Simbu |
Direction | Sundar C |
Music | Hiphop Tamizha |
Production | Lyca Productions |
Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் இன்று 2-1-2019 ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ரங்கநாதன் (நாசர்), மட்ரிட்டில் பெரிய பணக்காரராக உள்ளார். இவரது மகன் சுமன். அவரது தங்கை நந்தினி (ரம்யா கிருஷ்ணன்) வழக்கறிஞரான பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தனது மகள் சாதாரண வழக்கறிஞரான பிரபுவை திருமணம் செய்ததால் கோபமடையும் ரங்கநாதன், இதனால் பிரபுவை, துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். காயத்துடன் உயிர்தப்பிய பிரபுவை அழைத்துக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் இந்தியா வந்து செட்டிலாகி விடுகிறார்.
Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்
தனது செயலால் வருத்தமடைந்த ரங்கநாதன், தனது பேரன் ஆதி(STR)யிடம், நந்தினியுடன் தன்னை சேர்ந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். இதை தொடர்ந்து இந்தியா வரும் ஆதி, நந்தினியிடம் டிரைவர் வேலைக்கு சேர்ந்து, எப்படி பிரிந்த குடும்பத்தை இணைக்கிறார் என்பது படத்தின் மீதி கதை.
Attarintiki Daredi என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியானதால் கமர்சியல் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, சுந்தர் சி கடுமையாக உழைத்து இருப்பது படத்தை பார்க்கும் பொது தெளிவாக தெரிகிறது.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒருவர் பாரம்பரியமானவர் (கேதிரீன் தெரேசா) இவர் வெறுமனே சிம்பு உடன் டான்ஸ் ஆடுகிறார். மற்றொருவர் மார்டன் பெண் (மேகா ஆகாஷ்), இவரது நடிப்பை விட காஸ்டியூம் அதிகமாக உள்ளது. அதிலும், மேகா ஆகாஷ் காரில் அமர்ந்து கொண்டு நைட்டியை கழற்றும் காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்
படத்தில் அசால்ட்டாக நடித்துள்ள நடிகர் சிம்பு, கிளைமேக்ஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரயில்வே ஸ்டேஷன் சீனில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. வயல்வெளியில் நடக்கும் சீன்கள், சண்டை காட்சிகளில் எடிட்டிங் பணிகள் சிறப்பாக உள்ளது.
யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் VTV கணேஷ் ஆகியோர் தங்கள் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.
இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி, இவரது இசை சில இடங்களில் எமோஷனல் டிராமா பீலிங்கை உருவாக்குகிறது.
படத்தின் பாசிட்டிவ்
- சிம்பு டான்ஸ்
- சினிமாட்டோகிராப்பி
- ஆர்ட் டிபார்ட்மெண்ட்
படத்தின் நெகட்டிவ்
- படத்தின் நீளம்
- காமெடி ஒர்க் ஆகாமல் போனது
- படத்தின் எடிட்டிங்
மொத்தத்தில், சுந்தர்.சி படம் என்பதால் இந்த படத்தை குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.
Tamil Movie Review: Vantha Rajavathaan Varuven Tamil Movie Review – வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்
வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா ரேட்டிங் – 2.5/5