Lok Sabha polls in Tamil Nadu

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.