மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
K S Alagiri
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை
Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக கூறினார். மேலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய அவர், இந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.