Jasprit Bumrah
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
India vs Australia, 2nd T20I: இன்று பெங்களூருவில் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் நிறைவிற்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் 113 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன்மூலம் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.
India vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு T20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் T20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து போட்டிகளில் ஓய்வில் இருந்த விராட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மயாங்க் மார்கண்டேவிற்கு சர்வதேச போட்டியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.