ISRO

பிப்ரவரி 6 ஆம் விண்ணில் பாய்கிறது ஜீசாட்-31

பிரெஞ்சு கயானாவிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி ஜீசாட்-31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இது 40 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் விசாட் நெட்ஒர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச் டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றிற்கும் பயன்படும்.

இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட்

ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் செயற்கைக் கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் செலுத்தப்படுகிறது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பயன்பாட்டிற்காக மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. கலாம்சாட் என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் இதனுடன் செலுத்தப்பட உள்ளது.

திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித்துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், ஆய்வு மற்றும் புதுமைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விண்வெளித்துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான இந்த ஆதரவு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூரில் உருவாக்கப்படும் என்றும்,ஏற்கெனவே திரிபுராவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.