interim Budget 2019-20

இடைக்கால பட்ஜெட் 2019 : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அமைச்சரவை சகாக்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜனாதிபதியையும் சந்தித்தார். தொடர்ந்து, இந்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களாக, பேட்டரி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும், 2030-ல் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை, வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, மீன்வளர்ப்புக்கு தனித்துறை அமைக்கப்படும், திரைப்பட தயாரிப்பிற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும், பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும் போன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்

2019 இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட்டை பியுஷ் கோயல் தாக்கல் செய்கிறார். மோடி அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன.