Indian National Congress

Puducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ள நாராயணசாமி அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்ணா போராட்டம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வரை சந்தித்து பேச தயாராக உள்ளேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Puducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டித்துதான் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என புதுவை முதல்வர் கூறியுள்ளார் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

Puducherry Breaking News: கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தர்ணா

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர், இது வரை மாநில அரசு சமர்பித்த 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்காத்தை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறை படுத்த ஆளுநர் தடையாய் உள்ளார் என கூறி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துணை ராணுவம் வரவழைக்க பட உள்ளதாக தகவல்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு

பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை

மக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி!

2015 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்த பின் அவருடைய அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். எதிர் கட்சிகளின் ஒவ்வொரு செய்கையையும் விமர்சித்து சிறிது கிண்டலாக அவர் போடும் டிவீட்களும், சரமாரியாக கேட்கும் கேள்விகளும் ஊடகங்களின் பார்வையை அவர்மீது திருப்பியது. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனக்கென ஒரு ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கினர். 15 நிமிடங்களில் 5000 பேர் அவரை பின்தொடர்ந்தனர். ட்விட்டர் என்ட்ரி அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.