இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் இன்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 237 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையே நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலி மற்றும் டெல்லியில் நடந்த அடுத்த மூன்று ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி 3-2 போட்டி கணக்கில் தொடரை வென்றுள்ளது.
Indian Cricket Team
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
250 ரன்களை குவித்த இந்திய அணி
India vs Australia 2nd ODI: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது, பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மிங்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி
India vs Australia 2nd ODI: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தன் 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
13000 ரன்களை குவித்து தோனி சாதனை
India vs Australia:இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் இதுவரை அவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 13000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் 13000 ரன்களை குவித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் மட்டுமே லிஸ்ட் ஏ 13000 போட்டிகளில் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
India vs Australia, 2nd T20I: இன்று பெங்களூருவில் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் நிறைவிற்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் 113 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன்மூலம் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.
20 ஓவர் நிறைவில் இந்திய அணி 190/4
India vs Australia, 2nd T20I: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் விளாசியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார் கேப்டன் விராட் கோலி. மேலும் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இரண்டாவது டி20 போட்டியில் அஸ்திரேலிய அணி பந்து வீச்சு
India vs Australia, 2nd T20I: இரண்டாவது டி20யில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், விஜய் ஷங்கர், சித்தார்த் கௌல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5வது ஓவர் முடிவில் 39 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 28(17), தவான் 8(13) ரன்கள் எடுத்திருந்தனர்.
பெங்களூருவில் இன்று ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 போட்டி – ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி!!
India vs Australia, 2nd T20I: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இன்று இரண்டாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன் செய்யும் விதத்தில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2
இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு 159 ரன்கள் இலக்கு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 159 ரன்களை இலக்காக கொண்டு தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடரை கைப்பற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் முனைப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரண்டாவது டி20 போட்டி-வெற்றிக்கான கட்டாயத்தில் இந்தியா
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்திய அணி உள்ளது.
80 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ததுதன் மூலம் டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நியூசிலாந்து.
பத்து ஓவர் நிறைவு பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97/1
97/1 மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்ரோ குருணால் பாண்டிய வீசிய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்குப்பின் களத்திற்கு வந்த வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் செய்போர்ட் அரைச்சதத்தை கடந்து 58( 35 ) ரன்களுடன் களத்தில் உள்ளார். பத்து ஓவர் நிறைவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.
நியூசிலாந்து அதிரடி ஆட்டம்
இந்தியா நியூசிலாந்து அணி முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் சற்று நேரத்திற்கு முன்பு துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 7 ஓவர் முடிவில் 74 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை கூட விடாத நிலையில் உள்ளது. தொடக்க வீரர்களான செய்போர்ட் மற்றும் முனரோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செயபோர்ட் 24 பந்துகளில் 38 ரன்களும் முனரோ 18 பந்துகளில் 34 ரன்களை அடித்து அசத்தினார்.
விராட் உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன் – ரவி சாஸ்திரி
பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட்- உம் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விராட் பற்றி பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரின் தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாரும் இல்லை. பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகரில்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். விராட் பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் விராட் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டார். அவர் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதை குறிப்பிடலாம் என்று கூறினார்.
முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச தடை விதித்தது: ஐசிசி
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே சமீபத்தில் நடந்த போட்டியில் பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை குறித்து அம்பயர்கள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து 14 நாட்களுக்குள் அவரை பவுலிங் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் காலம் முடிவடைந்த நிலையில், அவர் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.