நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது, வரும் மே மாதம் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் இளம் வீரர்களான ரஹானே, ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகதேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
India Live Score
டி20 தொடரை கைபற்றியது நியூசிலாந்து அணி
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைபற்றியது. இன்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 212 விளாசியது. அதிகபட்சமாக முன்றோ 72 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அனைத்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர், இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் விஜய் சங்கர் 43 ரன்கள் எடுத்திருந்தார், ஆகையால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட இந்திய அணி. தொடரிலும் தோல்வி அடைந்தது.
டி20 தொடரை வெல்ல இந்திய அணிக்கு 213 இலக்கு
இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டகாரர்கள் இருவருமே குல்தீப்பின் சுழலில் சுறுண்டனர். அதிகபட்சமாக முன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அணிக்கு வலிமை சேர்த்தார். இருப்பினும் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர். 20 ஓவர் நிறைவில் 212/4 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்தனர். கடினமான இலக்கை அடையும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.