ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
India Cricket Team
இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
250 ரன்களை குவித்த இந்திய அணி
India vs Australia 2nd ODI: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது, பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மிங்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி
India vs Australia 2nd ODI: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தன் 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
India vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு T20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் T20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து போட்டிகளில் ஓய்வில் இருந்த விராட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மயாங்க் மார்கண்டேவிற்கு சர்வதேச போட்டியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடரை கைபற்றியது நியூசிலாந்து அணி
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைபற்றியது. இன்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 212 விளாசியது. அதிகபட்சமாக முன்றோ 72 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அனைத்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர், இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் விஜய் சங்கர் 43 ரன்கள் எடுத்திருந்தார், ஆகையால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட இந்திய அணி. தொடரிலும் தோல்வி அடைந்தது.
டி20 தொடரை வெல்ல இந்திய அணிக்கு 213 இலக்கு
இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டகாரர்கள் இருவருமே குல்தீப்பின் சுழலில் சுறுண்டனர். அதிகபட்சமாக முன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அணிக்கு வலிமை சேர்த்தார். இருப்பினும் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர். 20 ஓவர் நிறைவில் 212/4 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்தனர். கடினமான இலக்கை அடையும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.
T20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியானது
2020-ல் நடைபெற உள்ள T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஆண்கள் அணிகளுக்கான தொடர் 2020ம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும். இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. பெண்கள் அணிகளுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. வரும் மார்ச் 8-ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடக்கிறது. ஒரே நாட்டில், ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு
ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை ICC அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ICC கனவு அணி, சிறந்த வீரார்களின் பெயரினை ICC இன்று அறிவத்துள்ளது. ICC டெஸ்ட், ஒருநாள் கனவு அணி என இரு அணிகளுக்கும் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கோலி, 2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டகாரர், சிறந்த ஒருநாள் ஆட்டகாரர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார்.