Hospital

தமிழகத்தில் விரைவில் அம்மா அம்புலன்ஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டத்துக்கு “ அம்மா திட்டம்” என்றே பெயர் வைப்பது வழக்கம். குறிப்பாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பெயரிட பட்டுள்ளது, அதன் வரிசையில் விரைவில் வருகிறது அம்மா அம்புலன்ஸ். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”அம்மா ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை அதிநவீன வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்வரிசையில் அவசர காலத்தில் உதவும் வகையில் அம்மா அம்புலன்ஸ் திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

இந்த பணிக்கான தகுதி Nursing பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் மாதம் ரூ.44,900 – 1,42,400 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். www.jipmer.pusucheery.gov.in என்ற இணையத் தளத்தில் விண்ணபம் செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி வரும் பிப்ரவரி 13 தேதியாகும்.