வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
General Election
Makkal Needhi Maiam: எங்களை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் – சீறும் கமல்
Makkal Needhi Maiam Latest News: மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கமல் 25 வருடமாக இவர்களுக்கு கிராம சபை கூட்டம் இருப்பது தெரியாமல் போனது ஏன். எங்கள் கட்சி நடத்தியதை பார்த்து காப்பி அடித்துள்ளனர், என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரை கமல் விமர்சித்துள்ளார்.
Makkal Needhi Maiam: நான் சட்டையை கிழிக்க மாட்டேன் கமல் கிண்டல் பேச்சு
Makkal Needhi Maiam Latest News: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் சட்டமன்றத்தில் எனது சட்டயை கிழிக்க மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படியே கிழிந்தாலும் சட்டையை மாற்றிவிட்டு தான் வெளியே வருவேன் என்றார் கமல். இரண்டு ஆண்டுகள் முன்னர் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து விட்டதாக கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது
Rajinikanth won’t contest 2019 Lok Sabha elections: இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.