மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பற்றி கருத்து தெரிவித்த ஜி.கே வாசன் ராகுலை விட மோடி தான் சூப்பர் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி எனவும் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான் அதற்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம் என்றார்.
g. k. vasan
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?
Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.
Lok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்
Lok Sabha 2019 TMC News : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், “தமாகாவின் பலத்தை அங்கீகரிக்க கூடிய கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறினார். மேலும் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன் அனுதாபங்களை தெரிவித்த அவர், இரண்டாண்டு ஆட்சியில் அதிமுக அரசு நிறைய மக்கள் நல பணிகள் செய்துள்ளதாகவும் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.