Farmers

17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி

நேற்று குஜராத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 17 ரூபாய் நிதியை விட அதிக நிதி வழங்குவோம்” என்று கூறினார். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, 15 தொழில் அதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் கூறினார்.

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!