மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
Edapaddi Palanisami
இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.
சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக
Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி
Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.
“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன?”- நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.