திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் பி.ஆர் நடராஜனும் மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் பி.ஆர் நடராஜன் முன்னாள் கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் என்பது கூறிப்பிடதக்கது. இரு வேட்பாளர்களும் திமுக ஆதரவோடு போட்டியிடுவதால் அவர்கள் வெற்றி பெருவார்கள் என அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.
DMK president M K Stalin
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக
வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை எங்களுக்கே தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார், விசிகவின் கோரிக்கை ஏற்று தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்ட தொகுதியையே கொடுத்துள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக!
மக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அப்போது வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னை ஓட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆகிய தொகுதிகளிலும் திமுக தான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து தொகுதிகளில் திமுக தன்வசம் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் திமுக சார்பில் சமூகத்தில் பிரபலமானவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி
திமுக
- சென்னை வடக்கு
- சென்னை தெற்கு
- மத்திய சென்னை
- ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம் (தனி)
- அரக்கோணம்
- வேலூர்
- தர்மபுரி
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நீலகிரி (தனி)
- பொள்ளாச்சி
- திண்டுக்கல்
- கடலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- தூத்துக்குடி
- தென்காசி (தனி)
- திருநெல்வேலி
காங்கிரஸ்
- புதுச்சேரி
- சிவகங்கை
- கன்னியாகுமாரி
- விருதுநகர்
- தேனி
- திருச்சிராப்பள்ளி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- ஆரணி
- திருவள்ளூர் (தனி)
விடுதலை சிறுத்தைகள் கட்சி
- விழுப்புரம் (தனி)
- சிதம்பரம் (தனி)
மதிமுக
- ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மதுரை
- கோவை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- திருப்பூர்
- நாகை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி
- ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
- நாமக்கல்
ஐஜேகே
- பெரம்பலூர்
மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்
சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.
ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை
கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.
சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.