திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
DMK Kanimozhi MP
இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்
திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி
டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.